அமெரிக்க இராணுவ கப்பல் மீது ஈரான் தாக்குதல்!!
பிரேக்கிங் நியூஸ்: ஹார்முஸ் நீரிணை அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை மீற முயன்றதாகக் கூறி ‘தூஸ்கா’ (Touska) என்ற கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்திய நிலையில், இந்த நடவடிக்கையை “ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை” என ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய ட்ரோன்கள் ஏவப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி ராணுவ மோதல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
#

You must be logged in to post a comment.