அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள்
உலகளவில் பிரபலமாக உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் தங்களை விட அதிக வயது வித்தியாசத்தில் உள்ள பெண்களை மணந்துள்ளனர்.
மகேந்திர சிங் டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டோனி காதல் திருமணம் செய்துகொண்டவர். இவரது மனைவி சாக்ஷி இவரை விட 7 வயது குறைந்தவர். இவர்களுக்கு ஜிவா என்ற மகள் உள்ளார்.

MSD and Sakshi
இர்ஃபான் பதான்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சஃபா பையிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் ஆகும்.

Irfan pathan and safa baing
கிளென் மெக்ராத்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மெக்ராத்தின் முதல் மனைவி ஜேன் கடந்த 2008ல் இறந்துவிட்டார்.
இதன்பின்னர் 2010ல் சாரா என்ற பெண்ணை மெக்ராத் மறுமணம் செய்து கொண்டார்.
மெக்ராத்தை விட சாரா 12 வயது இளையவர் ஆவார்.

Glenn mcgrath and sara
தினேஷ் கார்த்திக்
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், முதலில் நிகிதா என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
பின்னர் அவர் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 6 ஆண்டுகள் ஆகும்.

DK and Deepika
சோயப் அக்தர்
பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளரும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தர், கடந்த 2014ஆம் ஆண்டு ரூபப் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 19 ஆண்டுகள் ஆகும்.

Shoib akthar and Rubab Khan
