World

அதிக வரவேற்பைப் பெற்ற ‘கரப்பான் பூச்சி பியர்’ விற்பனை!

ஜப்பானில் கரப்பான் பூச்சிகைளைப்  பயன்படுத்தி தயாரிக்கப்படும்  பியர்  (beer) வகையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Insect Sour அல்லது Konchu Sour என்று அழைக்கப்படும் இப்பியரானது  கபுடோகாமா எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்பட்டு தயாரிக்கப்படுவதால் அதனை ஜப்பானியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பருகி வருவதாகக் கூறப்படுகின்றது.

அதாவது நன்நீரில் இருக்கும் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை வெந்நீரில் வேகவைத்து 3 முதல் 4 தினங்கள் வரை வைத்த பிறகு, அதில் இருந்து எடுக்கக்கூடிய சாறு பீயராக மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இப்பிரத்யேக பீியரை ஜப்பானியர்கள் அருந்தி வந்தாலும் தற்போது அதன் விற்பனை மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading