அன்று அமெரிக்க ஜனாதிபதி இன்று இலங்கை ஜனாதிபதி!

கொவிட் மரணங்களை அறிக்கையிட்டு பட்டியலிடுவதில் குளறுபடிகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளை கடிந்துகொண்டுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பயணத் தடை நீக்கப்படவிருந்தது. ஆனால், 11ஆம் திகதி 101 கொவிட் மரணங்கள் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. உண்மையில் அந்த அறிக்கையை சரியாக ஆராய்ந்தால் அன்றைய தினத்தில் 15 பேர் மட்டுமே கொவிட் தொற்றினால் மரணித்துள்ளனர். எனினும், பிழையாள அணுகுமுறையினால் இவ்வாறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போது யாரும் அச்சம் கொள்வார்கள். இவற்றை சரியாக செய்ய வேண்டும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்,
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவியில் இருந்த டொனால்ட் ட்ரம்ப் போது வெளியான கொவிட் மரணங்கள் குறித்த அறிக்கையில் அதிருப்தி வெளியிட்டிருந்தார். இந்தப் படங்களும், தற்போது இலங்கை ஜனாதிபதியின் படங்களும் சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன.
