World

அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி

போர் தாக்குதலை மீண்டும் தொடங்க போவதாக அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்தில், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அமைதி ஒப்பந்தம் சிதையாமல் தொடர 1% மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க தன்னிடம் சிறந்த திட்டம் இருப்பதாகவும், புராஜெட் ஃப்ரீடம்(Project Freedom) திட்டத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் அனைத்து நிலைகளிலும் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் எத்தகைய நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள ஈரானிய ஆயுதப்படை உச்சக்கட்ட தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிரிகளின் தவறான முடிவுகள் மற்றும் உத்திகள் மிகப்பெரிய பாதுகாப்புகளை ஏற்படுத்தும் எனவும், இதனை சர்வதேச சமூகங்கள் உணர்ந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் வழங்கும் பதிலடிகள் எதிரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும் காலிபாஃப் பதிவிட்டுள்ளார்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading