விமானத்தின் சக்கரத்தில் பற்றிய தீ: உயிர் தப்பிய 288 பேர்
நேபாளத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நூலிழையில் தப்பிய விமானம்
இன்று அதிகாலை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்திற்கு காத்மாண்டு விமான நிலையத்திற்கு வந்த வந்த ஏர்பஸ் ரக விமானத்தின் வலது பக்க பின் சக்கரத்தில் தீப்பிடித்தது.
விமானத்தின் சக்கரத்தில் தீ பரவியது கண்டறியப்பட்ட பிறகு உடனடியாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

288 பேரில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது.

You must be logged in to post a comment.