அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி!
அமெரிக்க வலுசக்தி திணைக்களத்தின் தரவுகளின்படி, அந்நாட்டின் முக்கிய எண்ணெய் கையிருப்பிலிருந்து மேலும் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் குறைவடைந்துள்ளது.
தற்போது அதில் 325.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மட்டுமே எஞ்சியுள்ளது.
இது 1983 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த எண்ணெய் கையிருப்பு அளவு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் போரினால் உலகச் சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது.
இதற்காகத் தனது இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகவே இவ்வாறு எண்ணெய் இருப்பு குறைவடைந்துள்ளது.

You must be logged in to post a comment.