அமெரிக்காவில் 8 ஆயிரம் அரச ஊழியர்கள் பணிநீக்கம்…!!!
அமெரிக்காவில் 8,000 மத்திய அரசு ஊழியர்கள் பணிநீக்கம்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
அமெரிக்க மத்திய அரசாங்கத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
மத்திய அரசில் பணிபுரியும் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
இந்த உத்தரவை வெள்ளை மாளிகை மற்றும் பணியாளர் மேலாண்மை அலுவலகம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.
அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் அந்தந்த அரசுத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணிநீக்கத்திற்கான காரணங்கள்:
அதிகப்படியான சம்பளம் பெறுதல்.
பெறும் சம்பளத்திற்கு இணையான வேலைத்திறன் இல்லாமை.
தேவைக்கு அதிகமான பணியாளர்கள் இருப்பது.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கை உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

You must be logged in to post a comment.