World

அமெரிக்காவில் சொகுசு ஹோட்டலை வாங்குகிறார் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவில் முகேஷ் அம்பானி சுமார் ரூ. 729 கோடி ரூபாய்க்கு சொகுசு ஹோட்டலை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி அமெரிக்காவில் மிகப்பெரிய சொகுசு ஹோட்டலை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பாந்திராவில் மிகபெரிய ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முகேஷ் அம்பானி தொடர்ச்சியாக சர்வதேச அளவில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் முகேஷ் அம்பானி நியூயார்க்கின் மத்திய பூங்கா அருகில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் என்கின்ற சொகுசு ஹோட்டலை வாங்கியுள்ளார். உலகளவில் இது மிகப்பெரிய ஹோட்டலாக விளங்கி வருகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் இன்று வரை நல்ல வருவாயினை ஈட்டி வருகின்றது. அதோடு பல விருதுகளையும் வென்று குவித்துள்ளதாக ரிலையன்ஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின்  73.37% பங்குகளை தற்போது முகேஷ் அம்பானி வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் இன்றைய மதிப்பு 98.15 மில்லியன் டாலராகும். இந்தியா மதிப்பில் சுமார் 729 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading