World

அமெரிக்காவில் 5 இலட்சத்து 87 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரம் சிறுவர்களு;ககு தொற்று ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 71.04 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. உலக நாடுகளில் முதல் இடத்தில் உள்ள அந்த நாட்டில் பலி எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 948 சிறார்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

அவர்களில் கடந்த 3 ஆம் திகதியில் இருந்து 15 ஆம்திகதி வரை 74,553 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 2 வாரங்களில் 15 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது குழந்தைகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன. எனினும், அவர்களுக்கு பரிசோதனை செய்வது, மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வயது, இனம் அடிப்படையிலான உயிரிழப்பு விகிதங்களையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனடிப்படையிலேயே கொரோனா பாதிப்புகளால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்து அதற்கேற்ப அவர்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading