World

அமெரிக்காவுக்கு பதிலடி உறுதி! ஈரான் அறிவிப்பு!!

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது. தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் , முதற் கட்டமாக அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading