World

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

உலக அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளதாக நெதன்யாகு வலியுறுத்தி, “அவர் அந்த பரிசுக்கு தகுதியானவர்” எனக் கூறி, நோபல் பரிசு குழுவிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானும் பரிந்துரை செய்தது
இதே நோக்கில், சமீபத்தில் பாகிஸ்தானும் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

2025 நோபல் அமைதி பரிசுக்காக இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறுவது, அவரது சர்வதேச அரசியல் பங்களிப்புகள், குறிப்பாக இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் அவரது செயல்பாடுகள் காரணமாகவே என அனுமானிக்கப்படுகி

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading