Cinema

அம்மாடியோ…! எங்கேயோ மச்சம் – சன்னி லியோனின் தங்கையும் களத்தில்!

பாசப்பட நடிகையான சன்னி லியோனின் தங்கை மியாராய் லியோன், விமலின் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் சினிமா நடிகையாக உள்ளார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இவரது தங்கையும் தமிழில் அறிமுகமாவது தற்போது தெரிய வந்துள்ளது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல் கதாநாயகனாக நடிக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமாகி இருப்பவர் தான் மியாராய் லியோன். சன்னி லியோனுக்கு தங்கை முறையுள்ள இவரும் ஆபாசப்பட நடிகை எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் ஆஷ்னா சவேரி. இவர்கள் தவிர, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஏஆர் முகேஷ் இயக்குகிறார்.

ஏற்கனவே டிரெய்லர் ரிலீசானபோதே பெரும் சர்ச்சைகள் உண்டானது. டிரெய்லரே மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதனால் படமும் ஆபாசப்படமாக இருக்குமோ எனவும் சந்தேகிக்கப்பட்டது.

 

ஆனால், இப்படம் ஆபாசப்படம் அல்ல என அப்பட இயக்குநர் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தான் இப்பட நாயகிகளில் ஒருவர் ஆபாசப்பட நடிகை என்பது தெரிய வந்துள்ளது. அதோடு இவர் சன்னி லியோனின் தங்கை என்பது அவரது ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading