Local

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அவசர சந்திப்பு!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறு கட்சிகள் முக்கிய சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா?இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசித்து முக்கிய தீர்மானமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சந்திப்பானது அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் இன்று இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இலங்கையின் 76ஆவது பாதீட்டு உரை கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடு இதுவாகும்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதற்கமைய, அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4,128 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading