Local

அரசியல்வாதிகள் கலந்து கொள்ளாத பாட்டலி சம்பிக்க வீட்டு திருமணம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய -01- தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.

எனினும் இந்த திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும்.

நீண்ட காதல் உறவுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட அமாவுக்கும் குஷானுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலமானவர்கள் தமது திருமணங்கள் வெகு விமர்சையாக அரசியல்வாதிகளுடன் இடம்பெறும். ஆனால் பிரபல அரசியல்வாதியான சம்பிக்கவின் வீட்டுத் திருமணத்தில் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமை குறித்து அதிகம் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading