Local

அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் ஆனந்த தேரர் தெரிவிப்பு!

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் வீதியில் இறங்கி போராடுவோம் – என்று அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை விற்பனை செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் கடும் எதிர்ப்பு. அத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். கொரோனா தொற்றால் தற்போது வீதியில் இறங்கி போராட முடியவில்லை. வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் எமது எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறும். -என்றும் தேரர் எச்சரித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading