Local

அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக அரச வங்கிகள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போதுள்ள அரச வங்கி சட்டங்கள் இரத்து செய்யப்படும் என ரஞ்சன் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் உள்ள 30 பாரிய அரச வங்கிகளில் உள்ளடங்கும் இரண்டு வங்கிகள் இவ்வாறு பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஆறு வங்கிகளில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச வங்கிகளை ஸ்தாபிப்பதன் நோக்கம் தொலைதூர கிராம மக்களுக்கு சேவை செய்வதே தவிர இலாபம் தேடுவது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, எதிர்காலத்தில் அரச வங்கிகளை அரசியல் செல்வாக்கு மற்றும் வர்த்தக மாஃபியாவில் இருந்து பாதுகாப்பதற்காக மக்களுடன் இணைந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading