Local

மொட்டு கட்சிக்குள் உட்பூசல்!

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“தேர்தல் முறைமையை மாற்றம், தேர்தலை ஒத்திவைத்தல், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் எம்முடன் எவரும் கலந்துரையாடவில்லை. வேறு எங்கும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. எதிரணி தரப்பில் இருந்துதான் இப்படியானதொரு கதை வந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமனால் அதற்கு நான் உட்பட பலர் ஆதவு வழங்கமாட்டோம். இதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன்.

உள்ளாட்சிசபை தேர்தலை முறைமையை மாற்றபோய் என்ன நடந்தது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது தேர்தலே இல்லாமல்போயுள்ளது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading