Local

அரச வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு!

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் ரூ.1,942.36 பில்லியன் அரசாங்க வருவாய் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.1,619.23 பில்லியனாக இருந்த அரசாங்க வருவாயுடன் ஒப்பிடும்போது இது 19.95% அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் அரசாங்க வரி வருவாய் ரூ.1,491.25 பில்லியனில் இருந்து ரூ.1,802.48 பில்லியனாக 20.87% அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

இலங்கை மத்திய வங்கி வாராந்திரமாக வெளியிடும் பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading