அரையிறுதி போட்டியில் இலங்கை அணி?


இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் சுப்பர் 12 சுற்றில் நேற்று பிரிஸ்பைனில் இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு தொடர்கிறது. மேலும் அரையிறுதிக்கு செல்ல வேண்டுமாயின் ஏனைய அணிகளின் தோல்விகளும் இலங்கைக்கு தேவைப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி எடிலெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைய வேண்டும், மேலும் இலங்கை அணி இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம். அவ்வாறு நடக்குமானால் இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழையும்.
அவ்வாறு இல்லையெனில், நேற்று இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி எதிர்வரும் 4ஆம் திகதி அயர்லாந்து அணியுடனான போட்டியிலும் தோல்வியடைய வேண்டும், அத்தோடு இங்கிலாந்து அணியை இலங்கை வீழ்த்த வேண்டும்.
இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நடந்தால் மாத்திரமே இலங்கை அணிக்கு அரையிறுதிக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
