Local

நச்சுப் புகையை சுவாசித்த 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் பயிலும் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவின் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடு அல்லது பாடசாலையைச் சுற்றியுள்ள இடங்களிலோ சில எரிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நிலைமை காரணமாக மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading