Local

நாடாளுமன்ற மோதல் குறித்து அறுவரிடம் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் மருத்துவ அறிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரின் மருத்துவ அறிக்கைகள் கிடைத்துள்ளன.

கடந்த வௌ்ளக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் 12 பொலிஸார் காயமடைந்தனர்.

காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் சபாநாயகரின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்றத்துக்குள் கூரிய ஆயுதத்தைக் கொண்டு சென்றமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading