Local

அழுத்தங்களைக் கண்டு பீதியடையவில்லை அரசு! – மஹிந்த அணி எம்.பி. பந்துல கூறுகின்றார்

“மஹிந்த அரசுக்குக் கடன் வழங்க வேண்டாமென்று சிலர் சர்வதேச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களைக் கண்டு அரசு பீதியடையவில்லை.”

– இவ்வாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய கடந்த அரசால், நியமிக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவக் குழுவை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி யுகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கப்பட்டமை இரகசியமான விடயமல்ல.

ஆர்.பாஸ்கரலிங்கம் திறைசேரியின் செயலாளர் பதவியை வகித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு 12 கோடி ரூபாவுக்கு மேலான தொகை வழங்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கடந்த அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக செயற்பட்டார். நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைவதற்கான பொறுப்பை கடந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading