Sports

அவுஸ்திரேலியாவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெல்பேர்ன் நகரை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரும் இலங்கை ஏ அணியின் முன்னாள் வீரருமான 51 வயதுடைய சுரஞ்சித் சில்வா, பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சன்பரி பகுதியில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் குற்றச்சாட்டை மறுத்த இலங்கையர் வழக்கை விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரிய போதிலும், சாட்சி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் மோசமான செயல் - பகிரங்கமாக காட்டிக் கொடுத்த பெண் | Sri Lankan Accused In Australia

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் அவர் முகங்கொடுத்த தீவிர மன உளைச்சலை வெளிப்படுத்தியது.

தனது அனுமதியின்றி தனிப்பட்ட சுதந்திரத்திலும் உடலிலும் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் தான் தீவிரமான பாதுகாப்பற்ற தன்மைக்கும் மன பயத்திற்கும் ஆளானதாகக் குறிப்பிட்டார்.

மனிதர்களை நெருங்கி பழகும் போதே கடுமையான தயக்கம் ஏற்படும் அளவிற்கு இச்சம்பவம் தாக்கம் செலுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலம் மூலம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

பெண்ணின் வாக்குமூலம்

ரஞ்சித் சில்வா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இது தவறான கணப்பொழுதில் நிகழ்ந்த ஒரு பிழையாகும். பிரதிவாதி அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டவர் என்பதால் இத்தீர்ப்பு அவரது வணிகத்திற்கும் விசா நிலைக்கும் பாதகமாக அமையக்கூடும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் மோசமான செயல் - பகிரங்கமாக காட்டிக் கொடுத்த பெண் | Sri Lankan Accused In Australia

அவருக்கு முன்னர் குற்றப் பின்னணிகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டார். எனினும் அவருக்கு எந்த தரப்பிலும் அனுதாபங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் குடியேறிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுரஞ்சித் சில்வா, அங்கு இரண்டாம் மட்டத் தகுதி பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளராவார்.

சுரஞ்சித் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 26 ஆம் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading