ஆங்கிலேயர்களை கதற வைத்த 5 சினிமா நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் நடித்த நடிகர்களை பற்றி நமக்கு அந்த அளவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களின் படங்களை நாம் பார்த்து ரசித்து இருப்போம். அப்படிப்பட்ட நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமில்லாமல் அதிகளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நட்சத்திரங்களை பற்றி தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.




சிவாஜி கணேசன் : இவர் எல்லா காலத்திலும் சிறந்த நடிகர்கள் ஒருவர் என்று பெயர் பெற்றவர். இவருடைய நடிப்பு எப்போதுமே ஒரு முழுமையாகவும் பேசுகிற குரல் மற்றும் டயலாக் டெலிவரிக்காக அதிக அளவில் பாராட்டை பெறுபவர்.
இவர் பன்முக திறமை கொண்டவர். அதிக அளவில் தமிழில் பேசி பார்த்திருப்போம். ஆனால் யாரும் அறியாத வகையில் ஆங்கில அறிவாற்றல் இவரிடம் அதிக அளவில் இருந்துள்ளது.
ஜெயலலிதா: இவர் நடிகர் மற்றும் அரசியல்வாதி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 140 படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழ் சினிமாவின் ராணி என்ற பெயரை பெற்றவர்.
பின்னர் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்கு சென்று மக்களிடமிருந்து அபரிவிதமான புகழைப் பெற்ற இவர் தன்னுடைய கம்பீர பேச்சு தான் இவரின் முக்கிய பிளஸ் பாயிண்டாக இருந்தது. முக்கியமாக இவரிடம் இருக்கும் ஆங்கிலத் திறமை வெள்ளைக்காரர்களை தோற்றுப் போகும் அளவிற்கு இருந்தது என்று பலரும் கூறுவார்கள். அதனால் தான் இவரை அனைவரும் அயன் லேடி என்று அழைக்கிறார்கள்.
ஜெமினி கணேசன் : தமிழ் சினிமாவில் காதல் சம்பந்தப்பட்ட அதிகமான திரைப்படங்களில் நடித்த பெயர் பெற்றவர் ஜெமினி கணேசன். இவரை பலரும் காதல் மன்னன் என்றுதான் அழைப்பார்கள்.
அப்போது திரையுலகில் நுழைந்த இவர் சில கல்லூரி பட்டதாரிகளில் ஒருவர். இவரிடம் சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை இருந்ததால் அப்போதைய நடிகர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இவர் இருந்திருக்கிறார்.
ரவிச்சந்திரன்: 60, 70’ஸ்-களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நடித்த மலேசிய நடிகர். பின்னர் 1986 ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய ஆங்கில பேச்சு மிகவும் ஸ்டைலிஷ்-ஆகவும் அழகாகவும் இருக்கும் என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
முத்துராமன் : 60, 70’ஸ்-களில் நடிகராக நடித்து நவரச திலகம் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். இவரது குடும்பமே படித்து மேதையாக இருப்பவர்கள்
அதனால் என்னமோ இவரிடம் ஆங்கிலம் கலந்த அறிவாற்றல் சரளமாக இருந்தது. இவருக்கு எந்த விதத்திலும் குறைந்து போகாமல் இவரின் மகன் நவரச நாயகன் கார்த்திக் அவரும் அருமையாக ஆங்கிலம் பேசக் கூடியவரே…
