World

ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி, அந்நாட்ட இராணுவம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது.

அத்துடன் இராணுவத்தினருக்கு எதிரான தலைவர்களையும் கைது செய்திருந்தனர். ஆங் சாங் சூகி மீது நிதி மோசடி, கொரோனா விதி மீறல்கள் உள்ளிட்ட சில வழக்குகள் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நிதி மோசடி வழக்கில் குற்றவாளியாக்கப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading