World

ஆப்கான் மக்களின் இன்றைய நிலைக்கு அமெரிக்கா பிரிட்டன் பொறுப்பு கூறவேண்டும்!

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் சென் சூ வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்திற்கான சீனத் தூதர் சென் சூ, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலிடம் அமெரிக்கா, பிரத்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் படைகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 20 வருட இராணுவ பிரச்சாரம், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அல்ல என்றும், இது பிராந்திய நலன் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கு மட்டுமே பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலகிற்கு காட்டியது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் மற்ற நாடுளில் இராணுவத் தலையீடுகளை மேற்கொள்கின்றன.

மிகவும் மாறுபட்ட வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடுகளில் தங்கள் சொந்த கோட்பாட்டை திணிக்கின்றன.

இத்தகைய செயல்கள் பெரும் துன்பத்தை ஏற்படுத்தின என்று ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் சென் சூ கூறியுள்ளார்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading