Cinema

ஆம், அவர் வீட்டில்தான் தங்கினேன் – வைரமுத்துவுக்கு தலையிடி கொடுக்கும் சின்மயி

“வீழ மாட்டோம்” என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு வருமாறு அழைத்ததாக சின்மயி புகார் தெரிவித்திருந்தார்.

அது பற்றி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேஷ் என்பவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் “சின்மயி என் வீட்டில் தான் தங்கினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள சின்மயி, “ஆம். அவர் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும் தங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை அனுப்பிவிட்டார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கெட் புக் செய்யவில்லை.”

“வேலைக்கு செல்லவேண்டும் என சொல்லி எங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் சுரேஷ். அப்போது அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. அவர் மனைவியும் அப்படிதான். வைரமுத்து பற்றி பல விஷயங்கள் அவருக்கு தெரியும், ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என கூறியுள்ளார் சின்மயி.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading