World

ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறும் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள்

உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

பிரித்தானியாவில் பிரபலமான பீட்சா ஒன்றை சாப்பிடவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

pizza

Zizzi நிறுவனம், தனது Vegan Jackfruit Pepperoni Rustica பீட்சாக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

உணவு தரக்கட்டுப்பாடுகள் ஏஜன்சி அது தொடர்பாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பீட்சா கவரில் குறிப்பிடப்படாத பால் அந்த பீட்சாவில் கலந்திருக்கலாம் என்றும், அதனால் உடனடியாக Zizzi நிறுவனத்தின் தனது Vegan Jackfruit Pepperoni Rustica பீட்சாக்களை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

pizza

Batch code: 5105 மற்றும் Best before: 15/07/2026 திகதியிட்ட Zizzi Vegan Jackfruit Rustica Pizza Pack size: 400g pizza + 8ml chilli oil என்னும் பீட்சாக்களே திரும்பப் பெறப்படுகின்றன.

பால் ஒவ்வாமை உள்ளவர்கள் அந்த பீட்சாக்களை உண்ணவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பீட்சாக்களை திருப்பிக் கொடுத்துவிட்டு, அதற்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என Zizzi நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading