World

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து திடீரென விலகிய எலோன் மஸ்க்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் விலகுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் நிர்வாக செலவினங்களை குறைக்க ‘DOGE’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் அதன் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ட்ரம்ப் அளித்த இந்த பதவியில் 130 நாட்கள் பணியாற்ற எலோன் மஸ்க் ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிரடியாக நிர்வாகத்தில் அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

Elon Musk/Donald Trump

ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, அரசு செலவுகளை குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இதன்மூலம் அமெரிக்க அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து இந்திய மதிப்பில் ரூ.34,000 கோடி வரை குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக எலோன் மஸ்க் (Elon Musk) திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Elon Musk

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading