World

ஆய்வகத்தில் ஆபத்தான தொற்று; ரஷ்ய பெண் உயிரிழப்பு

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஓர் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஆபத்தானதொரு தொற்று பரவி, பெண் ஆய்வாளர் ஒருவர் (வயது 28) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அரசு ஊடகம் TASS வெளியிட்ட தகவலின்படி, இர்குட்ஸ்க் (Irkutsk) அருகே உள்ள ஷெலேகோவ் (Shelekhov) நகரில் அமைந்துள்ள ‘பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில்’ (Anti-Plague Research Institute) இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆய்வகத்தில் ஆபத்தான தொற்று; ரஷ்ய பெண் உயிரிழப்பு | Dangerous Infection Laboratory Russian Woman Dies

தொற்றுநோய்களைக் கையாளும் ‘ரோஸ்போட்ரெப்நாட்சர்’ (Rospotrebnadzor) என்ற அரசு அமைப்பானது, ஆய்வகத்திலிருந்து என்ன கசிந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறியுள்ளது.

காரணம் கண்டறியப்படாத” நியூமோனியா (Pneumonia of unknown origin) பாதிப்புக்குள்ளாகி அந்த ஆய்வாளர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் குறித்த அமைப்பானது, “இர்குட்ஸ்க் பிராந்தியம், இர்குட்ஸ்க் மற்றும் ஷெலேகோவ் நகரங்களில் சுகாதார மற்றும் தொற்றுநோயியல் சூழல் சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆய்வாளருக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் உரிய அதிகாரிகளால் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் உயிரிழந்தவர் “காரணம் கண்டறியப்படாத நியூமோனியா” நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது என்றும் ரோஸ்போட்ரெப்நாட்சர் அமைப்பு கூறியுள்ளது. அண்டை குடியரசான புரியாட்டியாவின் (Buryatia) தலைவர் அலெக்சி சிடேனோவ் (Alexei Tsydenov) கூறுகையில்,

உயிரிழந்த 28 வயதான பெண் ஆய்வாளர் “ஒருவேளை பிளேக் நோயினால்” உயிரிழந்திருக்கலாம் என்று முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதேவேளை, புரியாட்டியாவில் “பிளேக் நோய் பாதிப்பு எதுவும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இர்குட்ஸ்க் ஆளுநர் இகோர் கோப்சேவ் (Igor Kobzev), குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மிகவும் ஆபத்தான தொற்று நோய் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதன் அடிப்படையில் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வகத்திற்கு அருகே உள்ள ஒரு அலுமினிய ஆலை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது ஊழியர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் அலுமினிய ஆலையின் இயக்குநர் ஆர்டெம் ஃபோமினிக் (Artem Fominikh) இந்த தொற்று தொடர்பாக பல வதந்திகளும் முரண்பாடான செய்திகளும் பரவி வருவதாக சுட்டிக்காட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading