World

ஆற்றில் கலந்தது கொரோனா வைரஸ்!

இந்திய மாநிலமான குஜராத்தில் ஏரி ஒன்றில் எடுக்கப்பட்ட தண்ணீரை சோதனை செய்து பார்த்ததில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குஜராத்தின் சபர்மதி ஆறு, சந்தோலா எரியில் இருந்து தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு அதில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியை ஐஐடி காந்திநகர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சுற்றுச் சூழல் அறிவியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

அப்போது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் கொரோனா வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தாக்கும் போது காற்றில் மட்டுமின்றி நீரின் மூலமாகவும் பரவும் என்ற அச்சம் தற்போது அதிகரித்து வருகிறது.

மேலும், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading