இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதாக மனைவி அறிவிப்பு!
இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நேற்று (19) இரவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக பிரிவு முடிவை எடுத்ததாக சாய்ரா விளக்கமளித்துள்ளார்.
தனது வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் பொது மக்களிடமிருந்து தனியுரிமையைும் புரிதலையும் சாய்ரா வேண்டியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த ஜோடிக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் முடிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.