கைதான ஹரின் பெர்ணான்டோவுக்கு பிணை!
2024 பாராளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரசார பேரணி தொடர்பில் இன்று(20) வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு பதுளை பொலிஸார் விடுத்திருந்த அறிவித்தலுக்கமைய, அங்கு முன்னிலையான ஹரின் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரை தலா ரூபா 500,000 கொண்ட இரு சரீரப் பிணைகளில விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.