Cinema

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!!

134 திரைப்படப் பாடல்களின் உரிமையாளர் இளையராஜா இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்குத் தான் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவின் மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.

தனது இசையமைப்பில் உருவான பாடல்களின் காப்புரிமைக்காக நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இளையராஜா, ‘சரிகம’ நிறுவனத்திற்குச் சாதகமாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டைச் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பாடல்களின் உரிமையைத் தனக்கே சொந்தம் எனக் கோரிய இளையராஜாவின் வாதத்தை நிராகரித்து, சரிகம நிறுவனத்திற்குச் சாதகமான முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இளையராஜாவின் ஆரம்பகாலத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கற்களாக அமைந்த 134 படங்களின் பாடல்கள் தற்போது இந்த சட்ட முடிவின் கீழ் வந்துள்ளன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading