Local

இந்தியாவில் இலங்கைப் பொருட்களுக்கு வரி விலக்கு ..!!

இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும்.

இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகள்

இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார்.

ஏற்றுமதியாகும் இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு : வெளியான தகவல் | Tax Exemption For Sri Lankan Goods In India

இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம்.

வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. இந்தியாவின் 5,400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது.

ஏற்றுமதியாகும் இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு : வெளியான தகவல் | Tax Exemption For Sri Lankan Goods In India இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது.

அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது“ என தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading