World

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் தீவிரமடையும்!

இந்தியாவில் கொரோனா இன்னும் தீவிரமடையவில்லை என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, ஆனால் அதற்கான அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநர் மைக்கேல் ரையான் பேசும்போது, இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் 3 வாரங்களில் இரட்டிப்பாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் நோய்த்தொற்று பாதிப்பு வேறுபட்ட அளவில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நகரப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் அதிக அளவில் கிராமப் பகுதிகளுக்குச் செல்வதால், அவர்கள் மூலம் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading