Local

இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 50 பேர் நேற்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 941 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 880 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading