Sports

இந்தியாவை வீழ்த்தியது மிகச் சிறந்த தருணம் பாபர் அசாம் தெரிவிப்பு!

டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியதுதான் சென்ற ஆண்டின் சிறந்த தருணம் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த அக்டோபர் மாதம் அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை செய்தன.

உலகக் கோப்பை அரங்கில் இந்தியாவை ஒருமுறையேனும் வெல்ல வேண்டுமென்ற பாகிஸ்தான் அணியின் பெருங்கனவு அன்று நிஜமானது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்.

“ஒரு அணியாக நாங்கள் படைத்த மாபெரும் சாதனையாக இதனை பார்க்கிறேன். ஏனெனில் நெடுங்காலமாக உலகக் கோப்பை அரங்கில் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா திகழ்ந்தது. அதனால் அந்த வெற்றிதான் சென்ற ஆண்டின் எங்களது சிறந்த தருணம்” என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading