World

இந்தியா டெல்லியில் குண்டு வெடிப்பு 13 பேர் பலி!

 

இந்தியாவின், டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன

காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading