Sports

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டி ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது!

டி20 உலகக் கோப்பை 2022-க்கான தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஐசிசி நடத்தும் 2020-க்கான டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக அப்போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் துவங்கி, நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா முதன் முதலாக நடத்துகிறது. அடிலெய்டு, பிரிஸ்பேன், ஹோபர்ட், மெல்போர்ன், ஜிலாங்க், பர்த், மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. சொந்த நாட்டில் முதன்முதலாக நடைபெறுவதால், அந்நாட்டு ரசிகர்கள், டி20 உலகக் கோப்பை போட்டியைக் காண மிகவும் ஆவலுடன் உள்ளனர். ரசிகர்களும் இந்தப் போட்டியைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading