வாகனங்களில் 10 நாட்களுக்கு ஒலி எழுப்பத் தடை!

அடுத்த 10 நாட்களுக்குக் கனடாவின் தலைநகரான ஒட்டவாவில் (Ottawa) வாகனங்களின் ஹோர்ன்களைப் (Horn ) பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அந்நாட்டில் அரசின் கொரோனாக் கட்டுப்பாடுகளை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், கனரக வாகனங்களின் சாரதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாகனங்களின் ஹோர்ன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதனமான முறையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து ஒட்டவாவில் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும் சாரதிகளின் கைகளுக்கு விலங்கிடுவதுபோல் போல் அடுத்த 10 நாட்களுக்கு ஹோர்ன்கள் ஒலிக்கச் செய்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
