இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் பயணித்து வந்தவர் வேலு பிரபாகரன். இவர் 1980ல் வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் எனும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த அவர், நாளைய மனிதன் என்கிற படத்தில் இயக்குநரானார். இதன்பின் புதிய ஆட்சி, அசுரன் ஆகிய படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்த வந்தார்.

ஒரு கட்டத்தில் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் இருந்து விலகிய வேலு பிரபாகரன் படங்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய நபராக வலம் வந்த வேலு பிரபாகரன் உடலநல குறைவால் காலமானார். அவருடைய வயது 68. மாரடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் வேலு பிரபாகரன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

You must be logged in to post a comment.