World

இரட்டை கோபுர தாக்குதல் பிரதான சூத்திரதாரி வாக்குமூலம்!

இரு தசாப்தங்களின் பின்னர் இடம்பெற்ற 9/11 தாக்குதல் விசாரணை.

செப்டம்பர் 11 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஷேக் மொஹமட் தொடர்பிலான வழக்கு விசாரணை இரு தசாப்தங்களின் பின்னர் இடம்பெற்றுள்ளது.

கியூபாவில் அமையப்பெற்றுள்ள அமெரிக்காவின் கடற்படை தளமான Guantanamo Bay நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷேக் மொஹமட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எவ்வித விதிவிலக்குகளும் இன்றி அவர் ஒப்புக்கொள்வதை உறுதி செய்ய முடியுமா என நீதிபதி பிரதிவாதியின் சட்டத்தரணியிடம் கேட்டுள்ளார். இதற்கு ஆம் என சட்டத்தரணி பதில் வழங்கியுள்ளார்.

59 வயதான ஷேக் மொஹமட் கடந்த 2003ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். அமெரிக்காவின் பென்டகன் மற்றும் இரட்டை கோபுர வர்த்தக கட்டிடங்கள் மீதான தாக்குதலை திட்டமிட்டதில் பிரதான பங்கு மொஹமட்டிற்கு உள்ளது. 23 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்றுள்ள விசேட அம்சமாகும்.

2002ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல் மிகக் கொடூரமான குற்றச் செயலாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் உயிரிழந்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading