Cinema

இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நடிகர் விஜய்!
.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கும் இலங்கை தமிழ்ப்பெண்ணான சங்கீதா என்பவருக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இன்று விஜய் – சங்கீதா தம்பதி தங்களது 23ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். விஜய் – சங்கீதாவின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது.

பொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள். ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.

இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா லண்டனில் வசித்து வந்த சமயம் அது. பூவே உனக்காக படத்தை பார்த்து சிலாகித்து போன சங்கீதா, விஜயை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்தார்.

அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார். அப்போது விஜய் தன்னுடைய வீட்டில் சந்தித்து பேசலாம் என்று சங்கீதாவிடம் கூறியிருக்கிறார். சங்கீதாவும், ஷோபாவும் பொதுவான விடயங்கள் குறித்து நிறைய பேசியதாகவும், சங்கீதா தான் எங்கள் மருமகளாக வரப்போகிறார் என அப்போது தெரியாது என்றும் ஷோபா கூறியிருக்கிறார்.

பின்னாளில், இரண்டாம் முறை சங்கீதாவை விஜய் தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த கட்டத்தில், விஜய்யின் பெற்றோர்கள் தங்கள் மகன் சங்கீதாவை காதலிப்பதாக நம்பினர். மேலும் அவர் தங்கள் வீட்டிற்கு மருமகளாக வர ஏற்றவர் எனவும் நினைத்தனர்.

பின்னர் சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக் கொள்கிறாயா என கேட்க, நீங்கள் என்ன செய்தாலும் சரி தான் என பதிலளித்துள்ளார் சங்கீதா. அதே கேள்வியை விஜய்யிடமும் கேட்க அவரும் ஒப்பு கொண்டார்.

இதன்பிறகு பல தகவல்களின்படி விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா, சங்கீதாவின் பெற்றோரை சந்திக்க லண்டனுக்கு பறந்தனர். இரண்டு குடும்பங்களும் ஒருவரையொருவர் சந்தித்த பேசிய பின்னர் திருமணம் முடிவானது.

விஜய் – சங்கீதா திருமணம் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading