Local

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மகனுக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற தாய் கைது!

ஹோமாகமவில் மகனுக்கு ஹெரோயின் எடுத்துச் எடுத்துச்சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹோமாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரை இரும்பு கம்பியால் தாக்கி , தப்பிச்சென்று மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் மகனுக்கே அவர்  ஹெரோயின் எடுத்துச் எடுத்துச் சென்றுள்ளார்.

ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். 

இந்தப் பெண் கடந்த 23ஆம் திகதி மாலை காயமுற்று சிகிச்சை பெற்று வரும் மகனைப் பார்ப்பதற்கு வைத்தியசாலையின் 3 இலக்க வார்டுக்கு வந்துள்ளார்.

இவர் மகனுக்கு எடுத்து வந்த சோற்றுப் பார்சலில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினை சோதனையின் போது பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading