Local

இராணுவம், பொலிஸ் எமது கட்டுப்பாட்டிலேயே! – மங்கள அதிரடி அறிவிப்பு

இராணுவம் மற்றும் பொலிஸ் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்த பின்னர் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்புகளுமே தாமே அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி வரும் நிலையில்இ பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே இன்னமும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள அவர்,

தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இராணுவமும், பொலிஸாரும் இருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு உறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading