World

இராணுவ இலக்குகளை அடைய தவறிய அமெரிக்கா…!

ஈரானுக்கு எதிரான இராணுவ மோதல்களில் அமெரிக்கா தனது இராணுவ இலக்குகள் எதனையும் அடையத் தவறிவிட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகரும் முதன்மைப் பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் காலிபாஃப் (Mohammed Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியல் அரங்கில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அமெரிக்கா மீறியதன் மூலம் தனது சர்வதேச நம்பகத்தன்மையை மேலும் சீர்குலைத்துக் கொண்டுள்ளது எனச் சாடியுள்ளார்.

தெஹ்ரானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆர்மீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆரரத் மிர்சோயனை (Ararat Mirzoyan) சந்தித்தபோதே காலிபாஃப் இக்கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இராணுவ இலக்குகளை அடைய தவறிய அமெரிக்கா...! பகிரங்கப்படுத்திய ஈரான் | Iran Says Us Failed To Achieve Military Goals

சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஆரரத் மிர்சோயன், ஈரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நாட்டின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.

காகசஸ் (Caucasus) பிராந்தியம் வெளிநாட்டுச் சக்திகளின் போட்டிப் களமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிராந்திய நாடுகளின் எல்லைகளின் இறையாண்மையைப் பாதுகாப்பது இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானது என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading