Local

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி! ஒருவர் காயம்!!

இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வான் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டோவில் பயணித்தவர் படுகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். ஓட்டோ சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் தாகொன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளது. குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading