World

இரு இளைஞர்கள் அடித்துக்கொலை! – உத்தரப்பிரதேசத்தில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே சரையா கிராமத்தில் கோவில் விழா நேற்று நடந்தது. இதில் பக்கத்து கிராமமான கஜன்பூர் துரையா கிராமத்தை சேர்ந்த திலீப் யாதவ் (வயது – 28), ராகுல்சிங் (வயது – 30) ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவர்களை சரமாரியாகத் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
 
பின்னர் அந்தக் கும்பலினர் அங்கிருந்த 12 வயது சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
 
இது பற்றிய தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் கூடுதல் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading